மில்லியன் கணக்கானோர் கலந்து கொண்ட ஹஜ் யாத்திரை!! பலியான 14 பேர்!! காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!!

மில்லியன் கணக்கானோர் கலந்து கொண்ட ஹஜ் யாத்திரை!! பலியான 14 பேர்!! காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!!

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் இந்த வருடம் ஹஜ் யாத்திரையில் சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சவுதி அரேபியாவில் அதிக வெப்ப அலை காரணமாக சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட பின் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 17 பேர் காணவில்லை என ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஈரானிய யாத்ரீகர்களும் இறந்தனர் என்பதை ஈரானிய ரெட் கிரசென்ட் உறுதிசெய்துள்ளது.

ஆனால் அவர்கள் எப்படி இறந்தனர் என்று குறிப்பிடவில்லை.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரின் விருப்பப்படி அடக்கம் அல்லது கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் குறித்து சவுதி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான ஹஜ்.

மெக்கா மற்றும் மதீனாவில் இவ்வாண்டு வெப்பநிலை இயல்பை விட 1.5 முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சவூதி தேசிய வானிலை கூறியுள்ளது.

இந்த ஹஜ் யாத்திரை புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

சவுதி அதிகாரிகள் வெப்பத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பல காலநிலை கட்டுப்பாட்டு பகுதிகளை அமைத்துள்ளதாகவும், தண்ணீர் மற்றும் வெயிலில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வை யாத்ரீகர்களுக்கு கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.