விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்களைத் திருடிய ஜிம் ஊழியர்!

24 வயதுடைய , லாம் வென் ஜுன் ஹோவர்ட் ஒரு ஜிம் ஊழியர், அவர்மீது ஜூன் 13 (இன்று) இரண்டு திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

ஜிம்மில் ஆண்கள் லாக்கர்களில் இருந்து மொத்தம் S$173,300 வெள்ளி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை அவர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஜனவரி 10, 2023 அன்று மதியம் 2 மணியளவில் Guoco டவரில் உள்ள ஜிம் விர்ஜின் ஆக்டிவ் என்ற இடத்தில் லாக்கரில் இருந்து S$13,300 மதிப்புள்ள Rolex Submariner Hulk கடிகாரத்தை அவர் திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்றொரு லாக்கரில் இருந்து S$160,000 மதிப்புள்ள Patek Philippe கடிகாரத்தை திருடியதாக சொல்லப்படுகிறது.

பிப்ரவரி 17 ஆம் தேதி இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறியது.

இரண்டு கைக்கடிகாரங்களும் மீட்கப்பட்டது.

அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.