கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய் உயிரிழப்பு……31 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை……

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மிக வயதான பாபி என்ற நாய், தனது 31 வயதில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Rafeiro என்ற இனத்தைச் சேர்ந்த இந்த காவல் நாய், பாபி 1992 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அன்று பிறந்ததாக அதன் உரிமையாளர் கூறினார்.

பொதுவாக இந்த இனத்தைச் சேர்ந்த நாய்களின் ஆயுட்காலம் 12 முதல் 14 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாபி 31 ஆண்டுகள் 165 நாட்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

அது சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் சுற்றித் திரிந்தது மற்றும் மனிதர்கள் உண்ணும் உணவை உட்கொண்டது போன்றவையே அதன் நீண்ட ஆயுட்காலத்திற்கு காரணம் என்று அதன் உரிமையாளர் கூறினார்.

இறக்கும் தருவாயில் பாபி நடமாடுவதை குறைத்ததாகவும், அதன் கண்பார்வை மோசமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.