சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!!

சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது சாங்கி,சிலேத்தார் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் தனியார் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் வர்த்தக மையமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 66 தனியார் விமானங்கள் இருந்ததாகவும்,அதே போல 2023 ஆம் ஆண்டு இறுதியில் 74 விமானங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் வேறு சில ஆசிய நாடுகளில் எத்தனை தனியார் விமானங்கள் இருந்தன?

இந்தோனேஷியா (56)
மலேசியா (45) தாய்லாந்து (45) ஆகிய நாடுகளில் தனியார் விமானங்கள் இருந்தன.