Singapore News in Tamil

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு!கடுமையான சட்டம் தேவை!

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவருகிறது.வளர்ந்து வரும் நிலையில் அதன் செல்வாக்கு காரணமாக தரவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூரில் மேலும் கடுமையான சட்டம் தேவைப்படக்கூடும் என்று கூறினர்.

தனிநபர் தகவல் அல்லது நிதி,சுகாதார விவரங்கள் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தப்படும் புகார்களைக் கையாள தற்போது சட்டங்கள் இல்லை என்று Jumio நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டார துணைத் தலைவர் பிரட்ரிக் ஹோ கூறினார்.

செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க புதிய விதிமுறைகளை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.

அதனால் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு முறைகள் குற்றம் செய்வதை மேலும் எளிதாக்கலாம் என்றார்.

ஊழியர்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயிற்சி அளித்து தரவுகளைக் கவனமாக கையாள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதில் அதிநவீன இணையப் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வைத்திருப்பதும் அடங்கும்.