சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!!

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்...!!!

பெண்கள் தங்கள் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக பெண்கள் பியூட்டி பார்லர்களில் ஆயிர கணக்கில் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பேசியல்களை செய்து கொள்கின்றனர். இது போன்ற பேசியல்கள் செய்து கொண்டும் சிலருக்கு முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக அதிக பணம் செலவழித்து கிரீம் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பச்சை பயறு கொண்டு சரும நிறத்தை மேம்படுத்தும் பேஸ் பேக்கை இனி வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

✨️பச்சை பயறு – இரண்டு டேபிள்ஸ்பூன்

✨️கெட்டி தயிர் – ஒரு தேக்கரண்டி

✨️ரோஸ் வாட்டர் – 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

👉முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சைப் பயிரை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பிறகு அதை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

👉 பிறகு தண்ணீரை வடித்துவிட்டு பச்சைப் பயிரை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


👉 பிறகு இந்த பச்சை பயறு விழுதை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉 அடுத்து கால் டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.

👉 இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் உலர வைத்து பின் சுத்தம் செய்தால் முகம் பளிச்சென மாறும்.

இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து ஏழு நாட்கள் பயன்படுத்தி வந்தால் முகத்தின் நிறம் மாறுவது கண்கூடாகத் தெரியும்..

பச்சைப் பயரின் நன்மைகள்:

✨️ பச்சைப் பயரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதைச் சருமத்தில் தடவினால், சருமம் பளபளப்பாகும்.

✨️ பச்சை பயறு பேஸ் பேக் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.


✨️ வறண்ட சரும பிரச்சனை உள்ளவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.

✨️ முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் எண்ணெய் பசையைப் போக்க பச்சை பயறு பேஸ் பேக் உதவுகிறது.

✨️ பச்சை பயறு பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால், சருமத்துளைகள் முற்றிலும் அழிக்கப்படும்.

✨️ முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்க பச்சை பயறு பேஸ் பேக் பயன்படுத்தலாம்.

✨️ பச்சை பயறு பேஸ் பேக் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு புதிய பொலிவை தருகிறது.