போக்குவரத்து கட்டண உயர்வை சமாளிக்க உதவித்தொகை...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பெரியவர்கள் கூடுதலாக 10 காசுகள் செலுத்த வேண்டும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் செப்டம்பர் 9 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது வருடாந்திர கட்டண மறுஆய்வுக்குப் பிறகு வந்துள்ளது.
இந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்.
மாதாந்திர பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டண அட்டை வைத்திருப்பவர்கள் கூடுதலாக 4 பைசா செலுத்த வேண்டும்.
மேலும் இந்த கட்டண உயர்வை சமாளிக்க, 250 மில்லியன் மதிப்பிலான கூடுதல் மானியத்தை அரசு வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பொது போக்குவரத்து பற்றுச்சீட்டை பெறுகின்றன.
ஒவ்வொரு பற்றுச்சீட்டும் 60 வெள்ளி மதிப்புடையது.
இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுகளைவிட 10 வெள்ளி அதிகம்.
இந்த பற்றுச்சீட்டுகள் மூலம் மேலும் 60,000 குடும்பங்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பட்டம் பெற உள்ள மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும்.
பட்டம் பெற்றவுடன் 4 மாத சலுகைக் கட்டண அட்டையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆண்டுக்கு 75,000 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here