90 வயதில் 45 கிலோகிராம் எடை தூக்கிய பாட்டி!!

90 வயதில் 45 கிலோகிராம் எடை தூக்கிய பாட்டி!!

45 கிலோ எடையை மிகவும் எளிமையாக தூக்கும் 90 வயதுடைய மூதாட்டி.

செங்சென் சின் மேய் என்ற மூதாட்டி எடை தூக்குவதை அவரது வாழ்வில் வழக்கமான ஒன்றாக செய்து வருகிறார். இவர் தைவானைச் சேர்ந்தவர்.

அந்த மூதாட்டி பார்க்கின்சன்ஸ் என்ற நோயால் அவதிப்பட்டுள்ளார்.அதனால் அவர் கடந்த வருடத்திலிருந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எடை தூக்குவது உடலின் உறுதியை மேம்படுத்துகிறது என்று செங் சென் கூறுகிறார்.

வயதில் மூத்தவர்கள் அனைவரும் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்போமே என்று செங் சென் கூறுகிறார்

டிசம்பர் மாதம் 21ஆம் தேதி எடை தூக்கும் போட்டியில் செங் சென் பங்கேற்றார்.

அதில் பங்கேற்ற அனைவரும் 70 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.

இப்போட்டியில் பங்கேற்ற மிக மூத்தவருக்கு வயது 92.

தாத்தா,பாட்டிகளுக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்பதற்காக உறவினர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி திரண்டு இருந்தனர்.