டிரான்ஸ் கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டதை கைவிடும் கிராப் நிறுவனம்…!!

டிரான்ஸ் கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டதை கைவிடும் கிராப் நிறுவனம்...!!

சிங்கப்பூர்: தனியார் வாடகை கார் நிறுவனமான கிராப், சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய டாக்ஸி ஆப்ரேட்டரான டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை வாங்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

கிராப் நிறுவனம் முன்னதாக டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டிருந்தது.
சிங்கப்பூரின் போட்டித்தன்மை,பயனீட்டாளர் ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 22) இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்தமானது கைவிடப்பட்டது என்று கூறியது.

கடந்த ஆண்டு (2023), ஜூலை மாதம் ஒப்பந்தம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. கிராப் மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவது மற்ற நிறுவனங்களிடையே டிரைவர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்த மாத தொடக்கத்தில், இந்த திட்டம் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அதிக கட்டணத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

கிராப் நிறுவனம் சிங்கப்பூரின் போட்டி சட்டத்திற்கு உடன்பட்டு மதிப்பளித்து நடப்பதாக கூறியது.