சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் சிலர் தொடர்ந்து சத்தம் போட்டு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களைச் சமாளிக்க சிங்கப்பூர் காவல்துறை எடுக்கும் நடவடிக்கை முயற்சிகள் குறித்து பாட்டாளிக் கட்சியின் ஜேமஸ் லிம் கேள்வி எழுப்பினார்.
காவல்துறையில் சத்தம் தொடர்பிலான புகார்களும் பதிவாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அண்டைவீட்டுகாரர்களிடையே நடக்கும் பிரச்சனைகள் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
இத்தகைய சிக்கல்களைச் சமாளிப்பதற்கு சமூக அடிப்படையிலான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
அதிகாரிகள்,சமூக அமைப்புகள்,அரசாங்க அமைப்புகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதற்கான தீர்வுகளை ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
இது போன்ற பிரச்சனைகளில் காவல்துறை தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
சண்டைகள் ஏற்படும்பொழுதும்,பெரிய அளவில் கூட்டங்கள் கூடினாலும், அதிகப்படியான சத்தம் ஏற்படும்பொழுதும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
சட்டவிரோதமான குற்றங்கள் நடந்தால் காவல்துறை அது குறித்து விசாரணை நடத்தும். அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.