Latest Singapore News in Tamil

அரசாங்க அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் கால் மாத போனஸா!

வரும் ஜூலை மாதம் சுமார் கால் மாத போனஸ் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்க உள்ளது.

அதனைப் பற்றி அரசாங்க சேவை பிரிவு வெளியிட்டுள்ளது.

பூஜ்யம் புள்ளி மூன்று மாத போனஸ் அனைவருக்கும் வழங்கப்படும்.

தொடக்கநிலை அலுவலர்களுக்கு கூடுதலாக 400 வெள்ளி ஊதியம் வழங்கப்படும்.

சிங்கப்பூரின் மந்தமான பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு போனஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

ஆண்டு இறுதி போனஸை தீர்மானிக்கும் போது அரசாங்கம் பொருளாதார நிலைமையையும் உன்னிப்பாக கண்காணிக்கும்.

இந்த வருடத்திற்கான தேசிய சம்பள மன்ற வழிகாட்டுதல்களும் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.