கூகுளின் குரோம் தளம் விற்கப்பட வாய்ப்பு!!

கூகுளின் குரோம் தளம் விற்கப்பட வாய்ப்பு!!

கூகுளின் குரோம் இயங்குதளத்தை விற்க அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bloomberg அறிக்கை செய்த தகவல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

கடந்த மாதம் (அக்டோபர்) கூகுள் செயல்படும் விதத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுளை பயன்படுத்தி வந்தோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.

இதற்குப் பின்னணியில், கூகுள் தேடல் சேவைகளை முதன்மை தேடல் தளமாக ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டு வர ஆப்பிள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு கூகுள் பணம் கொடுத்ததாக வழக்கு விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதன் மூலம் பயனாளர்களின் தரவுகளைப் பெற்று உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் தளமாக மாற்றியதாக நீதிபதி கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here ⬇️