சிங்கப்பூரில் புதிய வீட்டிற்காக விண்ணப்பிக்கும் சிங்கிள்ஸ்களுக்கு ஓர் இன்பச் செய்தி!!
சிங்கப்பூர்:குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெற்றோருடன் அல்லது அவர்களுக்கு அருகில் வசிக்க புதிய வீட்டிற்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்களுக்கு விரைவில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.^
இந்த வாய்ப்பு முந்தையதாக திருமணமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து இரண்டு கட்டங்களாக இது செயல்படுத்தப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
சமூக கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
திருமணமானவர்களுக்கான முன்னுரிமை திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான முன்னுரிமை திட்டம் ஆகியவை புதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அவர்களது இளம் வயது பிள்ளைகள் அல்லது திருமணமான பிள்ளைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரே BTO திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கு கூட்டாக விண்ணப்பிக்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg