சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட அரை மாத இடையாண்டு போனஸ் வழங்கப்பட உள்ளதாக பொதுச் சேவைத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்று கூறியது.

அந்த கூடுதல் தொகையானது கிட்டத்தட்ட 250 வெள்ளி வரை இருக்கும்.

பொருளாதார செயல்திறன் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படுவதாக பொதுச் சேவைத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு 0.3 மாதங்கள் இடைக்கால போனஸ் வழங்கப்பட்டது.

ஆனால் இம்முறை சற்று அதிகமாக 0.45 மாதாந்திர போனஸ் வழங்கப்படுகிறது.

பொருளாதார நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தேசிய சம்பள கவுன்சிலின் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு ஆண்டு இறுதி போனஸ் முடிவு செய்யப்படும் என்றும் பொது சேவை துறை தெரிவித்துள்ளது.

இதனால் சிங்கப்பூர் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.