வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் ரிசர்வ் வங்கி...!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மார்ச் 2026க்குள் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1% குறைக்கக்கூடும் என்று SBI ஆராய்ச்சி கணித்துள்ளது.
மேலும் 2025-26 நிதியாண்டிற்கான முதல் ரெப்போ விகிதக் குறைப்பு ஏப்ரல் மாதத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25% உடன் தொடங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் MPC கூட்டம் இன்று (ஏப்ரல் 9) நிறைவடைந்து புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025-26 நிதியாண்டின் முதல் பணவியல் கொள்கை கூட்டம் ஏப்ரல் 7, 2025 அன்று தொடங்கி இன்று முடிவடையும்.
இந்த நிலையில், ரொக்க இருப்பு விகிதம் மற்றும் ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.குறிப்பாக, ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைந்தால் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது.
பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும் போது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களைக் குறைக்கிறது.இதனால் சில மாதங்களில் பணவீக்கம் குறையும்.
இந்த சூழ்நிலையில், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1 புள்ளி, அதாவது 100% குறைக்கும் என்று SBI ஆராய்ச்சி கணித்துள்ளது. அப்படி குறைப்பு செய்யப்பட்டால், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் ரெப்போ வட்டி விகிதம் 5.25% – 5.00% ஆக இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் அட்டவணையின்படி அடுத்த பணவியல் கொள்கைக் கூட்டம் ஜூன் 2025 இல் நடைபெறும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி 2026 இல் நடைபெறும்.
இந்த ரெப்போ விகிதக் குறைப்பால் பயனடைபவர்கள் வங்கியின் கடன் வாங்குபவர்கள், குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மட்டுமே. இது ஒரு நல்ல செய்தி, ஏனெனில் அவர்களின் கடன் வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறையும்.
உதாரணமாக, ரிசர்வ் வங்கி மார்ச் 2026 வரை ரெப்போ விகிதத்தை 1% குறைத்தால், ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் விகிதமும் 1% குறையும் என்பதால் பெரும்பாலான மக்கள் இதனால் பயனடைவர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan