உணவுத் துறையில் உள்ள கிட்டத்தட்ட 14,000 ஊழியர்கள் படிப்படியாக உயரும் சம்பளம் முறையின்கீழ் பயனடைய உள்ளனர்.
இந்தத் துறைக்கென முத்தரப்பு குழுமம் இருக்கின்றது.அரசாங்கம் முத்தரப்பு குழுமத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.
இவ்வாண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு வரை இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை படிப்படியாக உயர்வதற்கு பரிந்துரை வழி வகுக்கும்.
மேலும் அவர்களுக்கு ஏதுவாக வேலையில் முன்னேற்றம்,அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் வரும் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
முதலாளிகளுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த புதிய மாற்றங்களுக்கு அவர்கள் பழகிக் கொள்ள 6 மாதம் அவகாசம் வழங்கப்படும்.
மூவாண்டுகளில் சமையலறை உதவியாளர்கள், உணவு விநியோகிப்போர், சமையல்காரர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய ஊழியர்களின் சம்பளம் 19 விழுக்காடு வரை அதிகரிக்கும்.