தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!!

தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!!

அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது.இந்த தகவலை அப்படத்தை விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 170 கோடி வசூலைக் ஈட்டிருக்கலாம் என்ற தகவல் வெளி வந்துள்ளது.

இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியது.நேர் கொண்ட பார்வை வெளிவந்த 6 நாட்களில் 100 கோடி வசூல் செய்தது.

தற்போது குட் பேட் அக்லி விரைவில் 100 கோடி வசூலைப் பெற்ற அஜித் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் இப்படம் வியாபார ரீதியாக வசூலை ஈட்டி வருவது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.