மனிதன் உருவத்தில் கடவுள்!! கருணை நிறைந்த செயல்களிலே இறைவனை காணலாம் என்னும் வாக்கிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும் பெண்!!

Ms.Priscilla Ong (41) சிங்கப்பூரை பூர்விகமாக கொண்டவர்.இவர் 2014 லில் குழந்தை பராமரிப்பு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.மேலும் அச்சமயத்தில் Love Lunch என்னும் தன்னார்வ திட்டத்தின் கீழ் வறுமையில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கி வந்துள்ளார்.

ஆனால் 2016 இல் ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக ஆசிரியர் பதவியில் இருந்து விடுப்பு பெற்றுள்ளார்.விபத்தில் ஏற்பட்ட காயங்களால் எழுந்து நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.எனவே அவர் நடத்தி வந்த தன்னார்வ தொண்டு திட்டத்தினை தொடர்ந்து நடத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பினும் தனது சேவையை இடைவிடாது 20 பேர் கொண்ட ஒரு தன்னார்வ குழுவை அமைத்து வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உணவளித்து வந்துள்ளார்.

கிடைக்க பெரும் உதவி தொகைகள் மற்றும் உணவில் சிறு பங்கை அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டு சேவையை செய்துள்ளார்.இவ்வாறு சிறிய அளவில் தொடங்கப்பட்ட இச்சேவை தற்போது சிங்கப்பூரின் Yishun , Marsiling போன்ற பகுதிகளில் உள்ள வீட்டு வாரிய வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொண்டு செய்து வருகிறார் என்பது வியப்புடையதாவே உள்ளது.

இது மட்டும் இன்றி அந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 70 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மகளாகவும் அவர்களின் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் , மாதாந்திர மருத்துவ உதவிகள் செய்து வருவதாவும் கூறுகின்றனர்.

இதன் தொடர்பான ஒரு பேட்டியில் Ong , தனது தாயிடம் இருந்தே இவ்வாறு தொண்டுகளை மற்றவர்களுக்கு செய்வதை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும் வயதானவர்களுக்கு தனிமையின் கொடுமையை உணரவிடாமல் , உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற எண்ணத்தை வளர்ப்பதே அவரின் குறிக்கோள் என்று தெரிவித்து உள்ளார். Ong இன் இத்தகைய தொண்டால் அனைவரின் மனதில் நீங்காத இடம்பிடித்து உள்ளார்.

“சாதம் கூட பிரசாதமாகும்..!! எப்போதென்றால் ? இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் போது”!! எனவே முடிந்தவரை உதவி செய்வோம்!!