கோ கிரீன் 2024 பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தார் துணை பிரதமர் ஹெங்!!

கோ கிரீன் 2024 பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தார் துணை பிரதமர் ஹெங்!!

தூய்மையான சிங்கப்பூரைக் உருவாக்குவதில் அனைத்து சிங்கப்பூரர்களும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் வலியுறுத்தியுள்ளார்.

நம் நாட்டிற்காக ஒவ்வொருவரும் தனிமனிதர்களாக என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்று கூறினார்.

ரிப்பளிக் தொழில்துறை கல்லூரியில் கோ கிரீன் 2024 பசுமை இயக்கத்தை துணைப் பிரதமர் ஹெங் நேற்று துவங்கி வைத்தார்.

இந்த பசுமை இயக்கமானது மக்களின் சுகாதாரத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

கோ கிரீன் 2024 இயக்கம் ஒரு மாத கால நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் பயிலரங்குகள்,உரைகள்,இதர நடவடிக்கைகள் என்று 360 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.மேலும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிக்கு 180 க்கும் மேற்பட்ட பங்காளித்துவ அமைப்புகள் கை கொடுத்து ஏற்பாடு செய்துள்ளனர்.

அதில் ரிப்பளிக் தொழில்துறை கல்லூரியானது ‘பசுமை பயணம்’ என்ற நடவடிக்கைகளின் மூலம் பசுமையின் நிலையான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

மற்றொரு பங்காளித்துவ அமைப்பு OCBC வங்கி,இது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் ,பொருட்களை மறு பயனீடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

இந்த OCBC வங்கியானது மக்களிடையே பசுமையை நோக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதே சமயம் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் பல பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மக்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

பசுமை இயக்கமானது ஜுன் 12 ல் தொடங்கி ஜூலை 14 தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள மக்கள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்.