கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு...!!!

மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது.

குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை.

எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர்.

தீயணைப்புப் படையினர் சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து சிறுமியைக் காப்பாற்றினர்.

வீட்டில் வேறு ஏதேனும் ஆபத்து உள்ளதா என சோதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சிறுமியின் விரலில் லேசான காயங்களுடன் நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version