சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

பிரிட்டனில் 10 வயது சிறுமியின் மரணத்திற்கு தந்தையும் மாற்றாந்தியும் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியின் கொலைக்கு 42 வயதான தந்தை உர்பான் ஷரிப் மற்றும் 30 வயதான மாற்றாந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறுமியின் மரணத்திற்கு 29 வயது மாமா பைசல் மாலிக் தான் காரணம் என்றும் அவர்தான் கொலையை நடத்த அனுமதித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு (2023) 10 வயதான சாரா ஷரிப் என்ற சிறுமி லண்டனில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மூன்று குற்றவாளிகளும் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

ஒரு மாதம் கழித்து, பிரிட்டன் திரும்பிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.குழந்தையின் தந்தையான ஷரிப் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்தக் கொலை சம்பவம் பிரிட்டனையை உலுக்கி போட்டது.பிரேத பரிசோதனையில் சாராவுக்கு சுமார் 25 எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது.

மேலும் சிறுமிக்கு 100க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இந்த கொடூர செயலை அரங்கேற்றிய மூவரை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.