மண்டாய் வனவிலங்கு சரணாலயத்திற்கு குடும்பத்துடன் சுற்றி பார்க்க வந்த சிறுமியை பறவை தாக்கியதை அடுத்து அந்த சிறுமிக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜூன்11ம் தேதி,ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் பேர்ட் பாரடைஸில் உள்ள பறவைகளை சுற்றி பார்க்க சிறுமி ஆர்வமாக வந்தார். அப்பொழுது cockatoo எனப்படும் பறவை சிறுமியை தாக்கியது.
சனிக்கிழமையன்று ஒரு பேஸ்புக் பதிவில், திருமதி செரீன் சென் தனது கணவர் மற்றும் 13 வயது மகளுடன் பறவை பாரடைஸில் இருந்ததாகக் கூறினார்.
மேலும் அவர் ஜூன் 9 அன்று, மாண்டாய் பேர்ட் பாரடைஸில், வெள்ளை காக்டூ திடீரென என் பெண்ணைத் தாக்கியது. அவள் வேறு எதையோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பறவை திடீரென்று பறந்து வந்து எனது மகளின் தோளில் உட்கார்ந்து அவளது காதை திடீரென தாக்கியது, என்று கூறினார்.
செல்வி சென் தனது மகளின் காதில் இரத்தம் வரத் தொடங்கியதை புகைப்படமாக எடுத்து வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சரணாலயத்தை தொடர்பு கொண்ட பொழுது மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், சிறுமி மருத்துவ கவனிப்பைப் பெற பூங்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அதன் ஊழியர்கள் முதலுதவி அளித்து காயத்தை சுத்தம் செய்ததாகக் கூறினார்.
அதன் விலங்கு பராமரிப்புக் குழு கிளிகளை மக்கள் மீது அமர்வதைத் தவிர்க்க நிபந்தனைகளை விதித்து வருகிறது என்று மேலும் கூறியது. மேலும் காக்டூ பறவையானது சரணாலயத்தின் பின்புற பறவைக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மண்டாய் வனவிலங்கு குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் கூறிய பொழுது சரணாலயத்திற்கு வரும் பொதுமக்கள் தனது சுற்றியுள்ள பறவைகளை கவனிக்க வேண்டும் எனவும் கூர்மையான நகங்கள் மற்றும் அலகுகள் கொண்ட பறவைகளை தொட முயற்சிக்கக் கூடாது என்றும் அவற்றுக்கு உணவு அளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் இயற்கையுடன் இருக்கும் பறவைகளை சுற்றி பார்க்க வரும் பொழுது அவற்றுடன் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
விருந்தினர்கள் பளபளப்பான மற்றும் பிரதிபலிப்பு பொருள்களான நகைகள், சாவிகள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றை வெளியில் வைப்பதையோ அல்லது பறவைகளால் ஈர்க்கப்படுவதை கவனிக்காமல் விட்டுவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சிறுமி இப்பொழுது நலமாக இருக்கின்றார் எனவும் மேலும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சரணாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் படியும் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளது.