ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!!

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!!

ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர்.சில அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை உயர்ந்ததாக தெரிகிறது.

வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் ,விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தனர்.

ஏப்ரல் 20 ஆம் தேதி சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்க சென்ற இருவர் அலையில் சிக்கி கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஏப்ரல் 18 ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூன்று பேர் மூழ்கி உயிரிழந்தனர்.

மெல்பர்னில் கடலுக்குள் இரண்டு பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவருமே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அலைகளில் சிக்கிய மேலும் இரண்டு பேரை தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறினர். அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.