ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கணித்த கௌதம் கம்பீர்...!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
2023ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளுக்கு மிடில் ஆர்டரில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மட்டும் சிறப்பாக செயல்படத் தவறினார்.அதன்பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்த அவர், இந்திய அணியின் ஆலோசனையை ஏற்காமல் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தினார்.
அதன்பிறகு, இந்த விஷயம் சர்ச்சையானதும், ஷ்ரேயாஸ் ஐயர் உடனடியாக அதை சரிசெய்து, தனது தவறை சரிசெய்ய மீண்டும் உள்நாட்டு தொடரில் விளையாடினார். இந்நிலையில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்து சிறப்பாக செயல்பட்டார்.
முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக தான் களமிறக்கப்பட்டதாக ஐயர் வெளிப்படையாக கூறியபோது இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மீது சில விமர்சனங்கள் எழுந்தன.அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த தனது எண்ணங்களைக வுதம் கம்பீர் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், “ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் நல்ல ஃபார்மில் இருந்ததால், முதல் ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்க விரும்பினோம். ஆனால் அவர் எப்படிப்பட்ட இன்னிங்ஸ் விளையாடுவார் என்று பார்க்க விரும்பினோம். இருப்பினும், ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு வீரரை மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய வீரராக இருப்பார் என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். 50 ஓவர் உலகக் கோப்பையில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு முக்கியமான வீரர் என்று கூறியுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan