சிங்கப்பூரில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
2020-2022 ஆண்டுக்கான கிருமி பரவல் தொற்றைச் சமாளிக்க நிதியிருப்பிலிருந்து மொத்தம் 40 பில்லியன் வெள்ளி எடுக்கப்பட்டது.
அதிபரிடம் 52 பில்லியன் வெள்ளி ஒப்புதல் கோரப்பட்டது.ஆனால் எடுக்கப்பட்ட நிதி குறைவு.
சிங்கப்பூர் அதன் நிதியை சிக்கனமான அணுகு முறையைப் பின்பற்றுவதை இது காட்டுவதாக Lawrence Wong கூறினார்.
2022-ஆம் நிதியாண்டுக்கு 2 பில்லியன் வெள்ளி பற்றாக்குறையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 விழுக்காடு.