பிப்ரவரி,6-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேர்தல் குறித்த சில மாற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அதிபர் தேர்தல்,பொதுத் தேர்தல் தொடர்பான தாக்கலைச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைப் பொது சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும், கல்வி அமைச்சருமான Chan Chun Sing அவருடைய முதல் வாசிப்பில் மாற்றங்களை அறிமுகம் செய்தார்.
அவர் இரண்டு மாற்றங்களை அறிவித்தார். முதலாவதாக, வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் அஞ்சல் வழி முறையில் வாக்களிக்கலாம். இரண்டாவதாக, தேர்தல் விளம்பரச் சட்டம் தொடர்பாக மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு அஞ்சல் வழி மூலமாக வாக்களிக்கும் முறை உதவியாக இருக்கும் என்று கூறினார். இதற்கான சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். தேர்தல் தினத்துக்கு முன்பே சிங்கப்பூரர்கள் வாக்கை அனுப்பி வைக்க வேண்டும்.வாக்கானது தேர்தல் முடிந்து பத்து நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.
தாதிமை இல்லத்தில் இருப்பவர்களுக்கு உதவியாக படுக்கைகளில் இருந்தபடியே வாக்களிப்பதற்கும் இந்த சட்ட திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.