சிங்கப்பூரில் 5 குடியிருப்பு பேட்டைகளில் `Friendly Street´ அறிமுகம் காணப்படும்!

சிங்கப்பூரில் `Friendly Street´ திட்டம் அறிமுகம் காண உள்ளது.5 குடியிருப்பு பேட்டைகளில், அகலமான பாதைகளையும் அமைதியான போக்குவரத்தை ஊக்குவிக்கும் அம்சங்களைக் கொண்ட திட்டமாகும்.

2025-ஆம் ஆண்டுக்குள் முன்னோடி திட்டம் 5 வட்டாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

Ang mo kio,Bukit Batok west,Tampines,Toa payoh,west coast உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் முன்னோடி திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் எதிர்காலத்தில் மற்ற குடியிருப்புப் பேட்டைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் தெரிவித்தார்.

Friendly Street திட்டம் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும்,முக்கிய வசதிகள் இருக்கிற இடங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அந்தப் பகுதிகளில் அகலமான பாதைகள் மற்றும் பாதசாரிகள் எளிதில் கடப்பதற்குரிய வசதிகளும் இருக்கும்.

வாகனப் போக்குவரத்துச் சத்தமின்றி இருப்பதை ஊக்குவிக்கவும் சேர்க்கப்பட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

சாலைகளின் வடிவமைப்பில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.