சிங்கப்பூரில் இலவச ரயில் பயணம்!!
சிங்கப்பூரில் இந்த மாதம் 21-ஆம் தேதி தாம்சன் ஈஸ்ட்-கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள 7 நிலையங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படும்.
இந்த சேவை ஜூன் மாதம் (இம்மாதம்) 23-ஆம் தேதி தொடங்கும்.
அந்த நிலையங்கள் ஜூன் 21-ஆம் தேதி 2 நாட்களுக்கு முன்னதாகவே பொதுமக்கள் காணலாம்.
அதோடு இலவசமாக பயணிக்கலாம்.
மேலும் போட்டிகள் மற்றும் பரிசுகளை அங்கு எதிர்பார்க்கலாம்.
மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை 7 நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் பயணிக்கலாம்.
“கிழக்கில் வண்ணமயமான பயணம்” என்று இந்நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
Follow us on : click here