இந்த சிங்கப்பூர் இலவச சுற்றுலா பயணத்தில் பங்கேற்பதற்குப் பயணிகள் செல்லுபடியாகும் நுழைவு விசாவைப் பெற்றிருந்தால் போதுமானது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு, சுமார் 30% இருக்கும் இடைநிறுத்த(transit traveler) பயணிகளுக்கு மீண்டும் இலவச நகர சுற்றுப்பயணத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம்.
அறிக்கைகள்படி, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகில் உள்ள பிஸியான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.நாடு விட்டு நாடு செல்லும் போது நீண்ட தூர ஒற்றை விமானம் கிடைக்காது.
ஒரே விமானத்தில் வெகுதூர நாடுகளுக்கு செல்ல முடியாது.
அதுபோன்ற சமயங்களில் பயணிகள் இடையில் வேறொரு நாட்டில் இறங்கி மாற வேண்டி இருக்கும். இவ்வாறு இடை நின்று செல்லும் பயணிகள் இடைநிறுத்த (transit traveler) பயணிகள் என்று அழைக்கப்படுவர்.
சில மணி நேரங்கள்தான் இடைநிறுத்த பயணிகள் அந்த நாட்டில் இருப்பர்
அவர்கள் விமான நிலையத்திற்குள் இருப்பதற்கு பதிலாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அந்த நாட்டிலும் ஒரு சுற்றுலா அடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதை தான் சிங்கப்பூர் விமான நிலையம் செய்ய முயற்சிக்கிறது.
இந்த முயற்சி புது முயற்சி அல்ல. இது முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் விமான நிலையத்தை ஒரு இடமாற்ற மையமாக(transfer hub) மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், சிங்கப்பூரில் விடுமுறை தினங்களில் மக்கள்களைச் சுற்றுலாக்களுக்கு வர வைக்க தூண்டவும், இலவச நகர சுற்றுப்பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இலவச நகர சுற்றுலா கோவிட்-19 காரணமாக இரண்டு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர், மீண்டும் இந்த இலவச சுற்றுலாவை சாங்கி விமான நிலையக் குழு (CAG), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) சமீபத்தில் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த இலவச சுற்றுலா திட்டத்தில், நகர இடங்களின் டூர், ஜூவல் டூர் மற்றும் ஹெரிடேஜ் டூர் போன்ற சுற்றுப்பயணங்கள் இருந்தன. தற்போது அதில் புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அதில் சாங்கி விமான நிலையத்தைச் சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் இருக்கும் புதிரான காட்சிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயண திட்டம் தினமும் நடைமுறையில் இருக்கும். சுமார் 2.5 மணி நேரம் ஒவ்வொரு இலவச பயணமும் நீடிக்கும். கண்டிப்பாக தினமும் இந்த வாய்ப்பினை அடுத்த விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள் அனுபவித்துக் கொள்ளலாம்.
திட்டங்களை உங்கள் விமான நேரத்தைப் பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது சாங்கி விமான நிலையத்தின் இணையதளத்தில் முன்பதிவு வசதியும் பயணிகளுக்கு கிடைக்கிறது. அவர்களுக்கு எளிதாக்கும் வகையில் இது அமைகிறது.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் இடம் மாற்றம் செய்வதற்காக குறைந்தபட்சம் 5.5 மணி நேரம், அதிகபட்சம் 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரம் காத்திருக்கும் பயணிகள் அனைவரும் இந்த இலவச சுற்றுலா பயணம் திட்டத்தில் சேரலாம்.
அவர்கள் இதில் பங்கேற்பதற்கு அவர்களிடம் செல்லுபடியாகும் நுழைவு விசாவை வைத்திருந்தால் போதுமானது.
இந்த பயணத்திட்டமூலம் பயணிகளுக்கு சில இடங்களில் சிங்கப்பூரில் சுற்றுச்சூழல் நிலத்தன்மை முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தைக் காட்சியளிக்கும்.
இதில் சிட்டி சைட்ஸ் டூரின் ஒரு பகுதியாக உள்ள Gardens by the way,Our Tampines Hub இருக்கும் சுற்றுச்சூழல் சமூக பூங்கா மற்றும் ஜூவல் ஆகியவை சுற்றுச்சூழல் நிலத்தன்மை முயற்சிகளில் அடங்கும்.
மீண்டும் பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மேலும் விமான நிலையத்தில் பல புதிய இடங்களை ஆராய்ந்துப் பயணிகளை ஈர்க்கும் என்று சிஏஜியின் ஏர் ஹப் மற்றும் கார்கோ டெவலப்மென்டின் செயல் துணைத் தலைவர் லிம் சிங் கியாட் கூறினார்.