இசை மழையில் நனைய தயாரா??பிரபல அமெரிக்க பாப் சிங்கர் இசை நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட்டா ?? எங்க… எப்போ…எப்படி..??

சிங்கப்பூரின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான Heartware Network இளைஞர்களை மையமாக வைத்து பல்வேறு தொண்டுகளை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு இடையே நேர்மறை எண்ணங்களையும் மற்றவர்களுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மையையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 22 வருடங்களாக இலாப நோக்கமற்றத் தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இளம் தொழில் முனைவோர்களையும் உருவாக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாக Heartware Network உள்ளது.14 முதல் 35 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாக கொண்டு செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் சில போட்டிகளையும் , கிவ் – அவே போன்ற குலுக்கல் முறைகளையும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. மேலும் அதில் வெற்றி பெறும் நபருக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறது.

“கிழக்கு கடற்கரை இளைஞர் விழா ” என்ற போட்டி ஒன்றை நடத்தவிருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது. மேலும் அதில் வெற்றி பெறும் நபர் , கிழக்கு கடற்கரை குழு ( GRC) – இன் பாராளுமன்ற உறுப்பினர் Mr. Tan அவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று அறிவித்து இருந்தது.

ஆனால் நவம்பர் – 3 ஆம் தேதி நடந்த ஒரு பேட்டியில் சற்று மாறுதலான போட்டியை நடத்தவிருப்பதாக Heartware Network நிறுவனம் கூறியது.

முன்னர் அறிவித்து இருந்த படி Mr.Tan அவர்கள் நேரில் வர இயலாது என்பதால் அவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடலாம் என்றும் மேலும் நடக்கவிருக்கும் போட்டியில் வெற்றிபெறும் நபர் 2024 மார்ச் மாதம் நேஷனல் மைதானத்தில் நடக்க விருக்கும் பிரபல அமெரிக்க பாப் சிங்கர் Taylor Swift அவர்களின் இசை நிகழ்ச்சியின் நுழைவுச் சீட்டை இலவசமாக பெறலாம் என்று அசத்தலான பரிசை அறிவித்தது. மேலும் வெற்றி பெற்றவர் சிறப்பு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து ரசிக்கலாம் என்றும் கூறியுள்ளது.131 பெடோக் நார்த் அவென்யூ 3, அருகில் உள்ள மைதானத்தில் முதல் ஹார்ட்வேர்-ஈஸ்ட் கோஸ்ட் இளைஞர் விழா நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்ள செய்ய வேண்டியவை: 14 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.நவம்பர் 4 ஆம் தேதி- க்குள் Heartware Network – ன் சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க் – இல் முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்தவர்கள் நேர்க்காணல் போட்டியில் பங்கேற்று தனக்கான கூப்பனை பெற்று கொள்ளலாம். குலுக்கள் முறைப்படி வெற்றி பெற்ற நபர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.