நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு இலவச மருத்துவ பரிசோதனை…!!

நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு இலவச மருத்துவ பரிசோதனை...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொதுமக்கள் இலவசமாக நவம்பர் 15ஆம் தேதி வரை நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஆபத்தில் உள்ளீர்களா? என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

365 கேன்சர் சொசைட்டி மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து சோதனையை நடத்தி வருகின்றன.

இதில் 50 முதல் 80 வயதுக்குள் இருப்போருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புகைப்பிடிப்பவர்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்கள்,குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள்
என உள்ளிட்டோருக்கு பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்.

பரிசோதனைக்கு வருபவர் நீலம் அல்லது ஆரஞ்சு நிற CHAS அட்டை வைத்திருக்க வேண்டும்.

நுரையீரல் புற்றுநோய் பொதுவாக முற்றிய பிறகே அதன் அறிகுறிகளானது வெளிப்படும்.

இலவச பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.

இதனால் மக்கள் நோய்வாய் படுவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும்.