சிங்கப்பூரில் முதியவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது முதியவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் முதியவர்கள் மீதான அக்கறை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் அரசாக சிங்கப்பூர் அரசு இருந்து வருகிறது.
அந்தவகையில் மரின் பரேட் பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு உதவ இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதியவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்த இத்திட்டத்தை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இதனால் அருகில் உள்ள மருந்தகங்கள், சந்தைகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு முதியவர்கள் எளிதில் செல்ல முடியும்.
மரின் பரேட் பகுதியில் ஏராளமான முதியோர்கள் வசிப்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் அதன் முன்னோடி திட்டம் ஓராண்டு காலம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்களைத் தவிர வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பேருந்து சேவை வழங்கப்படும். ஜூலை 8-ஆம் தேதி செயல்பாடுகள் தொடங்கும்.
அப்பகுதியில் வசிக்கும் முதியோர்கள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கும், திரும்புவதற்கும் எளிதாக இருக்கும்.
Follow us on : click here