SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்…!!$12000 டாலர் இழப்பு..!!

SP குழுமத்தினர் என்ற பெயரில் விரிக்கப்பட்ட மோசடி வளையம்...!!$12000 டாலர் இழப்பு..!!

சிங்கப்பூர்: மின்சார விநியோக சேவை வழங்குநரான SP குழுமத்திடமிருந்து கட்டண பாக்கிகள் அல்லது கூடுதல் கட்டணங்கள் தொடர்பாக மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

SP குழுவை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் மோசடி சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இதுபோன்ற ஏழு முறைகேடுகள் நடந்தது பதிவாகியுள்ளது.

இந்த மோசடி சம்பவங்களில் மொத்தம் 12,000 டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ‘SP குழுமத்திலிருந்து’ மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றனர்.

கட்டணத்தைச் செலுத்த அல்லது கூடுதல் தொகையைத் திரும்பப் பெற இணையத் தொடர்பு முகவரியை அணுகுமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.

மின்னஞ்சலில் இந்த இணைய முகவரி 24 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அதை உண்மை என நம்பி தொடர்பு கொண்டு தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி அட்டை விவரங்களை அதில் பதிவு செய்தனர்.

இவர்களது வங்கிக் கணக்கில் அனுமதியின்றி பணப் பரிமாற்றம் நடப்பது தெரிய வந்தபோதுதான் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தால், அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரியைப் பார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காவல்துறை சார்பில் எவ்வளவுதான் அறிவுரை வழங்கப்பட்டாலும் இது போன்ற மோசடி வளையங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனவே பொதுமக்கள் அனைத்து வழியிலும் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டது.