இந்தியாவில் நோய் பரவல் காலத்தின் போது பல பேரால் Work From Home என்ற வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் வேலை இணையம் மூலம் தேடப்பட்டது. இதனை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறைக்கு மோசடி கும்பல் குறித்த புகார்கள் வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கியது. வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று தேடுபவர்களுக்கு தொடர்புக் கொண்டு இந்தியா தலைநகரமான புது டெல்லியில் வீட்டில் இருந்து வேலைச் செய்யும் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளது.
சுமார் 30000 க்கும் அதிகமானோர் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மோசடி தொடர்பில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் ஏமாந்தவர்கள் இழந்த தொகையைக் கணக்கிட்டது. அவர்கள் இழந்த தொகை 200 கோடி ரூபாய் ஆகும்.
மேலும்,விசாரணை நடத்தியதில் மோசடி கும்பல் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி கும்பல் பயன்படுத்திய Whatsapp எண்கள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி கும்பல் பயன்படுத்திய Telegram செயலி சீனாவில் இருந்து இயக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளி ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்களில் பல கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.சண்டிகர்,மும்பை,ஹரியானா, டெல்லி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செயல்படும் கும்பல்களுக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு என்று காவல்துறை தெரிவித்தது.