சிங்கப்பூரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட மோசடி!!

சிங்கப்பூரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட மோசடி!!

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் மார்ச் 20ஆம் தேதி அன்று சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மோசடிக்காரர்கள் ஐந்து பேரும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மோசடிகளும் பெரும்பாலும் சிங்கப்பூரர்களை குறிவைத்தே நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை S$820,000 க்கும் அதிகமாக இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலை தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.