சிங்கப்பூர் இலக்கிய பரிசு வென்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள்…!!

சிங்கப்பூர் இலக்கிய பரிசு வென்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ளூர் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 1992 இல் நிறுவப்பட்டது. இதில் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் போட்டியில் கலந்து கொள்வர்.

இதில் மொத்தம் 17 எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள்,கேளிக்கைச் சித்திரை கலைஞர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

அவர்களுக்கு 3000 வெள்ளி ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 2024 செவ்வாய்க்கிழமை
(செப்டம்பர் 10) சிங்கப்பூர் இலக்கியப் பரிசு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு தமிழ் பிரிவில் 4 எழுத்தாளர்களை கௌரவித்தது.

போட்டியின் தமிழ் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்:

புதுமைப் பிரிவு தமிழுக்கான விருதை ஆசிரியர் கே.கனகலதா “சீன லட்சுமி ”என்ற நூலுக்காக பெற்றார்.

சிறந்த அறிமுக நூலுக்கான விருதை
“காற்றலையில் ”என்ற நூலுக்காக எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜன் பெற்றார்.

சிறந்த கவிதை பிரிவு தமிழுக்கான விருது மதிக்குமார் தாயுமானவன் எழுதிய ‘யாமக்கோடங்கி’ எனும் கவிதைக்காக வழங்கப்பட்டது.

புதினம் அல்லாத படைப்பு ‘அப்பன்’ எனும் நூலுக்காக எழுத்தாளர் அழகு நிலாக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலப் பிரிவில் பங்கேற்ற எழுத்தாளர் ப்ரஷாந்தி ராம் எழுதிய ‘Nine yard sarees’ என்ற நாவலுக்கு பரிசு கிடைத்தது.

ஆங்கிலத் துறையின் விரிவுரையாளர் யோங் ஷு ஹூங் தனது மூன்றாவது சிங்கப்பூர் இலக்கியப் பரிசை ஆங்கிலக் கவிதைக்கான தனது“Anatomy of a Wave ”என்ற கவிதைத் தொகுப்பிற்காக பரிசு கிடைத்தது.

சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த அறிமுகப் பிரிவில் மூன்று எழுத்தாளர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.