சிங்கப்பூரில் உணவு டெலிவரி டிரைவராக சட்டவிரோதமாக வேலை செய்த நான்கு வெளிநாட்டினர்…..

சிங்கப்பூரில் 4 வெளிநாட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முறையான வேலை அனுமதியின்றி Foodpanda,Deliveroo பிளாட்பார்ம்களில் உணவு டெலிவரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளனர்.அதனால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விதிகளை மீறி சட்டவிரோதமாக உணவு டெலிவரி டிரைவராக பணி புரிந்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த Amanullah Faizal Navas, மலேசியாவைச் சேர்ந்த Ng Teik Chuan, Chaw Soon Yaw, Syazuwan Sharil ஆகிய நால்வரும் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் நால்வர் மீது வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 3 பேர் அவர்களுக்கு துணை போன குற்றத்திற்காக வழக்கை எதிர் நோக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆவர்.