Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர்.

எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த முன்னாள் மாணவியும் கலந்து கொண்டனர்.

பள்ளி பருவத்தில் இருவரும் காதலித்து வந்ததாகவும், அவர்கள் படிப்பு முடிந்த பிறகு, அவர்களின் பெற்றோர்கள் கூறியபடி வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் இருவரும் அவரவர் குடும்பங்களுடன் வசித்து வந்தனர். தற்போது அவர்களுக்கு வயது 50 எட்டியது.

மறு சந்திப்பு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவருடைய பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டது. நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

தன் மனைவியை காணவில்லை என்று கணவரும், தன் கணவனை காணவில்லை என்று மனைவியும் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.