சிங்கப்பூரில் $17,0000 மோசடி செய்த முன்னாள் OCBC வங்கி ஊழியருக்குச் சிறை...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் OCBC வங்கி ஊழியருக்கு சிங்கப்பூர் நாணய வாரியமானது 9 ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரு.ஹோய் வெய் கிட் 2017 முதல் 2018 வரை, ஐந்து OCBC வாடிக்கையாளர்களிடம் போலி வங்கிக் கணக்குகளைத் திறந்து அதில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்படி டெபாசிட் செய்த தொகையை அவர் தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இவ்வாறாக மொத்தம் $170,000 வெள்ளி அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டது.
மோசடி செய்த குற்றத்திற்காக அவருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூர் நாணய வாரியம் அவர் 9 ஆண்டுகளுக்கு நிதி ஆலோசனை நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
சீனா கேபிட்டல் இம்பெடஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாக இயக்குநரும் முன்னாள் தலைமை நிர்வாகியுமான சன் குவான் என்பவர் உரிமம் மற்றும் வணிக நடத்தை விதிமுறைகளுடன் நிறுவனத்தின் இணக்கத்தைப் பாதுகாக்கத் தவறிய குற்றத்திற்காக கடந்த மாதம் அவர் மீது MAS தடை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here