நோய் பரவல் காலகட்டத்தில் 2300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு செய்ததில் இத்தகவல் வெளிவந்தது . கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலாளிகள் புதிய வேலையாளர்களைக் கொண்டு வர ஆர்வம் காட்டுக்கின்றனர்.
அதற்கான ஆர்வம் முதலாளிகளிடம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் கூறினார். சுற்றுச்சூழல் சேவைகள், தளவாடம்,ஒட்டுமொத்த வர்த்தகம், வீட்டு விற்பனை, உணவு சேவைகள், சில்லறை தொழில்கள் ஆகிய துறையில் முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. இவர்களில் ஒரு சிலர் 9 மாதங்களுக்கு மேலாக வேலைகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
வேலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு திட்டம் காலாவதி ஆனாலும் சிங்கப்பூர் மஞ்சள் நாடா இயக்கத்தின் மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இத்திட்டம் முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.