முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!!
அமெரிக்க மாநிலமான மேரிலாந்தின் மிகப்பெரிய நகரமான பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது.
இந்த துயரச் சம்பவம் மார்ச் 26 ஆம் தேதியன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்தது.
டாலி என்று அழைக்கப்படும் அந்த கப்பல் பாலத்தின் மீது மோதியதில் Patapsco ஆற்றுக்குள் பாலம் இடிந்து விழுந்தது.
பாலத்திலிருந்த சுமார் 20 பேர் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
சில வாகனங்களும் நீரில் மூழ்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் பணியாளர்கள், இரண்டு பேரை மீட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவர்கள் கூறினர்.
மீட்புப் பணியாளர்கள் குளிர்ந்த நீரில் உயிர்பிழைத்தவர்களை தேடி வந்தனர்.ஆனால் அவர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.குளிர்ந்த நீரில் அவர்கள் உயிருடன் இருக்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதால் 6 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாலத்தின் மீது மோதுவதற்கு முன்பு கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததை எச்சரித்ததாக தெரிவித்தது.
சம்பவத்தின் போது கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூரின் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்தது.
மேலும் அவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சிங்கப்பூரின் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் விசாரணைக்கு உதவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தை மீண்டும் கட்ட 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
பாலத்தை மீண்டும் கட்டுவதற்கான முழுச் செலவையும் மத்திய அரசு செலுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.