பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் மணத்தொண்டி கிராமத்தில் வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமனாதன் தலைமை வகித்தார்.ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி முன்னிலை வகித்தார்.இந்த விழிப்புணர்வு முகாமில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வனத்தீ தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் பற்றியும் அதனை தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டது.மேலும் வனத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் வனத்தினை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.இந்நிகழ்வில் வனவர்கள் ஜெயக்குமார் ,பல்லவி வனக்காப்பாளர்கள் கனகவள்ளி,குணசேகரன்,வனக்காவலர்கள் முதலியப்பன்,யோகாம்பாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி அடைக்கன்,வார்டு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், வருங்காலம் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் டி.எம்.மணி,காடன்,மலையாண்டி, பழனியாண்டி,கா.ம.ஆண்டி,தருமர்,மெய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.