சிங்கப்பூரில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்ததாக பிடிபட்ட வெளிநாட்டினர்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்ததாக பிடிபட்ட வெளிநாட்டினர்!!

2021-ஆம் ஆண்டு முதல் மின் வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக வேலை செய்ததாக 11 வெளிநாட்டினர் மீது மனிதவள அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ ஜின்லி கேள்வி எழுப்பியிருந்தார்.

மின் வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்யும் வெளிநாட்டவர்களை கைது செய்ய சோதனை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை வெளிநாட்டினர் சிக்கினர் என்று கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு மனிதவள அமைச்சர் டான் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மின் வணிக நிறுவனங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கான தகுந்த வேலை அனுமதி அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று விநியோக நிறுவனங்களிடம் மனிதவள அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

நிலைமையை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவசியம் ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் கூறினார்.