சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சில லாரிகளில் கட்டாயம் வேக கட்டுப்பாடு சாதனத்தை பொருத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
இது குறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது.
வேக கட்டுப்பாடு சாதனத்தை 3,500 கிலோகிராமுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்லும் லாரிகளில் பொருத்த வேண்டும்.
அது வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Leon Perera வலியுறுத்தியுள்ளார்.
வேக கட்டுப்பாடு சாதனங்களை மதிப்பீடு செய்யவும்,திட்டத்தை செயல்படுத்தவும் போக்குவரத்து காவல்துறை சம்மந்தபட்ட தரப்பினருடன் ஆலோசித்து வருவதாகவும் உள்துறை துணை அமைச்சர் Faishal Ibrahim தெரிவித்தார்.