Latest Sports News Online

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்!

சிங்கப்பூரில் மார்ச்,1-ஆம் தேதி முதல் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டிகளும், சமூகப் பொது வழிகாட்டிகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

இனி,கோவிட்-19 பரிசோதனை நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும்.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் அவர்கள் விடுதியிலிருந்து குணமடையலாம்.பிப்ரவரி,13ஆம் தேதியிலிருந்து DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதி அட்டையைச் சமூக இடங்களுக்கு செல்லும் போது பயன்படுத்தினர். இனி, அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அது மட்டுமல்லாமல்,பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து Popular Places அட்டையை உபயோகப்படுத்த வேண்டியிருக்காது.இந்த அட்டைப் பொது விடுமுறையின் தினத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மக்கள் அதிகமாக செல்லும் 4 இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது.