சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தலைமறைவு!!

சிங்கப்பூர் பொங்கோலில் இக்கா லெஸ்தாரி 40 வயதுடைய ஒரு ஆசிரியர் தனது வீட்டு வேலைக்காக இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை இல்லப்பணி பெண் வேலைக்கு அமர்த்தினார்.

தற்போது அந்த பணிப்பெண்ணை முதலாளி தேடி வருகின்றார். ஏனென்றால் அந்த இல்லப்பணி பெண் நிறைய கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கி கொண்டதால் தான் பணி புரிந்த வீட்டை விட்டு தப்பித்து சென்று தலைமறைவாகி விட்டார்.

தப்பித்து சென்ற இல்லப்பணி பெண்ணை ஜனவரி 5 ஆம் தேதியன்று பொங்கோலில் பார்த்ததாக இக்கா கூறினார்.

அந்த பணிப்பெண் கடன்முதலைகளிடம் நிறைய கடன் வாங்கியுள்ளதாக இக்காவிடம் கூறியுள்ளார்.
அந்த காரணத்தினால் சம்பளத்தில் ஒரு தொகையை முன்கூட்டியே வாங்கினார் என்று இக்கா கூறினார்.

இக்கா சிங்கப்பூர் டாலர் $3950 பணத்தை பணிப்பெண்ணுக்கு கொடுத்ததாகவும்,மேலும் கடன் முதலைகள் அந்த பணிப் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்தார்கள் என்றும் கூறினார். அதோடு தனக்கும் நிறைய குறுஞ்செய்திகள் வந்ததாகவும் சொன்னார். இதனையடுத்து
ஒருநாள் கழித்து தொலைபேசியில் பணிப்பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால், அந்த பணிப்பெண் பதிலளிக்கவில்லை . அதனால் இக்கா வேலை இடத்திலிருந்து வீட்டிற்கு வேகமாக சென்றார்.

பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டிற்குள் நுழைந்து அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.இல்லப்பணி பெண்ணின் பாஸ்போர்ட், உடைகள், பெட்டி என எந்த பொருட்களும் இல்லை. அனைத்தும் காணாமல் போயிருந்தது. உடனே அவர் வீட்டில் வைத்திருந்த கேமராவை சோதனை செய்ததில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து காவல்துறையில் இக்கா புகார் அளித்தார் . இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.