சிங்கப்பூரில் பாதச்சாரி கடக்கும் தளத்தில் லாரி சைக்கிளைமீது மோதியது. அப்போது அந்த லாரியை ஓட்டி வந்த வெளிநாட்டு ஊழியர் உடையப்பன் வசந்த்.
அவருடன் லாரியில் பயணியாக இருந்த வெளிநாட்டு ஊழியர் ராஜேந்திரன் செல்லத்துரை உடன் இருந்தார்.
விபத்து நடந்த உடன் உடையப்பன் வசந்த் உடனடியாக ராஜேந்திரிடம் பொய் கூற சொல்லி உள்ளார்.
ராஜேந்திரன் தான் வண்டி ஓட்டியதாக காவல்துறையிடம் கூற சொல்லி இருக்கிறார்.
விபத்து நடந்த அன்று ஓட்டுநராக ராஜேந்திரன் ஓட்டியிருக்க வேண்டும்.
அதனால் ராஜேந்திரன் அதனை ஏற்றுக்கொள்ள நினைத்துள்ளார்.
ஆனால், அந்த விபத்தில் காயம் அடைந்த சைக்கிளை ஓட்டிய 64 வயதுடையவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.
அதனை அறிந்த ராஜேந்திரன் காவல்துறையிடம் உண்மையைக் கூறிவிட்டார்.
காவல்துறையிடம் உண்மையைக் கூறாமல் பொய் கூறியதால் அவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றொரு தேதியில் லாரியை ஓட்டிய உடையப்பனின் வழக்கு நடைபெறும்.