சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுத்தம், சுகாதாரம் எப்படி கண்காணிக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பதில் அளித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும்விடுதி சட்டத்தின்கீழ் செயல்படும் விடுதிகளில் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
சமையலறைகள் சுத்தமாக, ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதாக என்பது சோதிக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் கூறினார்.
விடுதி உரிமையாளர்கள் வெளியிலிருந்து உணவு வாங்கும்பொழுது உரிமம் பெற்ற கடைகளிலிருந்து மட்டுமே வாங்கலாம்.
ஊழியர்களிடம் அவைகள் கெட்டு போகாமல் சென்று சேர்கிறதா?உணவை அவர்கள் கையில் பெறும்வரை முறையான இடங்களில் வைக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறினார்.
அந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத விடுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதோடு, உடனடியாக சரிசெய்யும்படி உத்தரவிடப்படுகிறது
விடுதி உரிமையாளர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மனிதவள அமைச்சகம் எடுக்கும்.
தங்கும் விடுதிகளில் இருப்பவர்களுக்கு உணவு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறித்து FAST எனும் Forward Assurance and Support Team அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றார்.