இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் சாதனையைப் படைத்துள்ள காற்பந்து வீரர்!!

செப்டம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன்,செல்ஸி காற்பந்து அணிகள் மோதின.இப்போட்டியின் முதல் பாதியில் செல்ஸி காற்பந்து அணியின் வீரரான Cole Palmer நான்கு கோல்களை போட்டார்.

இவ்வாறு இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் 4 நான்கு கோல்களை போட்டியின் முதல் பாதியில் கோல் அடித்து அசத்தி புதிய சாதனையைப் படைத்து பெருமையை பெற்றுள்ளார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே இவ்வாறு செய்த முதல் வீரர் Palmer என்பது குறிப்பிடத்தக்கது.

4-2 எனும் கோல் கணக்கில் செல்ஸி அணிக்கு சாதகமாக ஆட்டம் முடிந்தது.

ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் Cole முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டம் சமமானது.

அதன் பின் அடுத்த 10-நிமிடத்தில் பெனால்டி மற்றும் Free kick கிடைத்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இரண்டு கோல்களைப் போட்டு அசத்தினார்.

முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்த நிலையில் நான்காவது கோலைப் போட்டார்.அவரது ஆட்டம் செல்ஸிக்கு சாதகமாக அமைந்ததோடு, அவரது கோல்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் எழுப்பியது.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் செல்ஸி அணி 4-ஆம் இடத்தில் 13 புள்ளிகளுடன் இடம்பிடித்துள்ளது.

தரவரிசைப் பட்டியலில் Liverpool அணி 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

 

Follow us on : click here ⬇️