நச்சுணவு சம்பவத்தால் இரு உணவகங்களின் உணவு சுகாதார மதிப்பீடு குறைக்கப்பட்டது!

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் Spize@ Simpang Bedok உணவகத்தில் தயார் செய்யப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு நச்சுணவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை.

இச்சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் உணவு அமைப்பும்,சுகாதார அமைச்சகமும் விசாரணை நடத்தியது.

சில சுகாதார குறைபாடுகள் Spize Continental kitchen,Spize உணவகம் ஆகிய இரண்டிலும் கண்டறியப்பட்டன என்று தெரிவித்தது.

இவ்விரண்டின் உரிமங்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது.

Spize உணவகம் சிம்பாங் பிடோக்கில் இருக்கிறது.

அது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அமைப்பு கூறியது.

இதனால் இவ்விரண்டு உணவகங்களின் உணவுச் சுகாதார மதிப்பீடு `A´ லிருந்து `C´ குறைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு உணவகங்களும் Spize நிறுவனத்திற்கு சொந்தமானவைகளாகும்.